வனவியல் முன்னுரை

வனவியல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

வனங்களின் முக்கியத்துவம்:

  • தேசிய அளவிலான காடுகளின் முக்கியத்துவம் பின்வரும் அம்சங்களில் அதிகம் உள்ளது. காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளன. உச்சக்கட்ட வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்தி சீரான காலநிலையை உண்டாக்குகிறது. மேய்ச்சலுக்கு விடப்பட்ட பகுதிகள் மற்றும் அதிகமாகக் கத்தரிக்கப்படும். பகுதி நிலங்கள் அதிகமாக உலர்ந்து விடுகிறது. இந்த சூழ்நிலைகளில் காடுகள், காலநிலையில் ஒரு பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. காடுகள், காற்றின் ஈர்பதத்தை அதிகப்படுத்துகிறது. இந்த வழியில், காடுகள் வலுவான குளிர் அல்லது சூடான மற்றும் உலர்ந்த காற்று, சூரியக் கதிர்கள்  ஆகியவற்றிலிருந்து விலங்குகளையும், பயிர்களையும் பாதுகாக்கின்றன. 
  • காடுகள், மழை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காடுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளைக் கொண்டு மண் வளத்தை அதிகப்படுத்துகிறது. மலைப்பகுதிகளில், காடுகள், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. வரண்ட வானிலைகளில் நீருற்றை உண்டாக்குகிறது. காடுகள், மண் அரிப்பு, நிலச்சரிவு, வெள்ள ஆபத்துகள் ஆகியவற்றைத் தடுக்கின்றன.
  • காடுகள், வெட்டு மரங்கள், எரிபொருட்கள், மரக்கூழ் ஆகியவற்றைத் தருவது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை வாய்ப்பைத் தருகின்றன.
  • காடுகள், வனவிலங்குகளின் உறைவிடம். இவை, முக்கியமான அழகிய மற்றும் சுற்றுலா மதிப்புகளைப் பெற்றுள்ளன. இவை, விலங்குகளோடும், தாவரங்களோடும் தொடர்புடையதனால் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கின்றன.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016